பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை: இராணுவ உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

கிராந்துருகோட்டை பகுதியில் நபரொருவர் தடுத்து வைக்கப்பட்டு அவரது பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை மற்றும் கிராந்துருகோட்டை பகுதியைச் சேர்ந்த 25 முதல் 34 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர் வவுனியா இராணுவ முகாமில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மோட்டார்சைக்கிள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்