பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

நீர்கொழும்பு, கிம்புலப்பிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நகர சபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை வளாகத்திலிருந்து பெருமளவு புகை வெளியேறியதை அடுத்து, உடனடியாக தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்களின் அளவு மற்றும் உயிர் சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.