பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு!

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வைத்து 29 வயதுடைய இளைஞர் மீது இன்று வெள்ளிக்கிழமை மதியம் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது நண்பனை சந்திப்பதற்காக இளவாலை பகுதிக்கு வந்துகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட கும்பல் அவர்மீது இவ்வாறு தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்