படுக்கை விரிப்பு, போர்வைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் 5 ஆண்டு சிறை!!

புகையிரதத்தில் பல்வேறு வகையான பிரயாண பெட்டிகள் உள்ளன. சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் போது போர்த்திக்கொள்ள போர்வை நீங்கள் தான் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் புகையிரதத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் போது புகையிரத நிலையம் உங்களுக்கு விரிப்புகள், தலையணை, போர்வைகள் போன்றவற்றை வழங்குகிறது.

பயணத்தின் போது புகையிரத நிலையம் வழங்கிய இந்த சாமான்களை நீங்கள் பயன்படுத்தலாம், இருப்பினும், பயணம் முடிந்ததும் இந்த சாமான்களை நீங்கள் பத்திரமாக வைத்து விட்டு போக வேண்டும். ஆனால், பயணத்திற்குப் பிறகு, சிலர் புகையிரத நிலையம் வழங்கிய படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

படுக்கை விரிப்புஇ போர்வைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் 5 ஆண்டு சிறை!!

ஆனால் அப்படி எடுத்துச் செல்வது சரியா? எடுத்து சென்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? இதற்கு தண்டனைகள் ஏதும் உண்டா? என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீங்கள் யோசித்ததுண்டா. அதற்கான விடை இந்த தொகுப்பில் உள்ளது. ரயிலில் இருந்து இறங்கும் போது உங்களுடன் படுக்கை பொருட்கள் கிடைத்தால், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்.

கொரோனா காலத்தில்இ புகையிரத நிலையம் இந்த விரிப்புகள், போர்வைகள் வழங்குவதை நிறுத்தியது. ஆனால், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு மட்டும் இரண்டு விரிப்புக்கள், ஒரு போர்வை, ஒரு தலையணை, தலையணை உறை மற்றும் கைக்குட்டை ஆகியவற்றைக் கொடுக்கும். ஆனால், இப்போது ரயில்வே துறை அரிதாகவே கைக்குட்டைகளை வழங்குகின்றது.

படுக்கை விரிப்புஇ போர்வைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் 5 ஆண்டு சிறை!!

2017,18ல் 1.95 லட்சம் கைக்குட்டைகள், 81,776 விரிப்புக்கள், 5038 தலையணை உறைகள், 7043 போர்வைகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல், ஆண்டுதோறும் ஏராளமான பெட் ரோல்கள் திருடப்படுகின்றன. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 14 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, புகையிரத பயணம் முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், படுக்கை சாமான்களை சேகரிக்க, புகையிரத அதிகாரிகள், புகையிரத உதவியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் மக்கள் திருட முடியாது. இதுபோன்ற சோதனைகளுக்குப் பிறகு பலர் கைது செய்யப்பட்டனர்.

படுக்கைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றால்….
பயணத்தின் போது கொடுக்கப்பட்ட படுக்கைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்று பிடிபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையில், இது புகையிரத சொத்து. எனவே, புகையிரத சொத்து சட்டம், 1966,  கீழ் புகையிரத சொத்தை திருடுவதற்காக ஓராண்டு சிறை தண்டனை , ஆயிரம் ரூபாய் அபராதம் முதல் அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்