படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவுநாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அகல் விளக்கேற்றி, மலர் தூபி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.