
படகு கவிழ்ந்ததில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை மூன்று இளைஞர்கள் ஒன்றாக குறித்த படகில் பயணித்த போது இவ்விபத்து இம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில், வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
