பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று

ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று (01) இடம்பெற்றது.

இதன்போது யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்,செடி, கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.

இந்த வைபவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.