பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாதி… அதிரவைத்த வாக்குமூலம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் செவிலியர் லூசி லெட்பி (வயது 33). இவர் அந்நாட்டின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும் 15 குழந்தைகளை கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார். 2018ம் ஆண்டு ஜூலை மாதம் இதே போன்று குழந்தை ஒன்றை கொலை செய்ய முயற்சித்த போது தான், சக மருத்துவர்களின் தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் காவல்துறை இவரை அதிரடியாக கைது செய்தனர். கைக்குழந்தைகள் உடலில் இன்சுலின் ஊசி போட்டு நஞ்சை ஏற்படுத்துவது, குழந்தைகளின் உடலில் சிரஞ்ச் மூலம் காற்றை ஏற்றி ரத்தநாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற கொடூரமான வழிகளில் பிஞ்சு குழந்தைகளை இவர் கொலை செய்துள்ளார்.

இரட்டை குழந்தைகள் மற்றும் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே பிறந்த குழந்தைகளை குறிவைத்து இவர் கொலை செய்து வந்துள்ளார் இதில் மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் . பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தையை கூட இவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் போது அவரது வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியதில் கையால் எழுதப்பட்ட மருத்துவமனை தொடர்பான ஆவணம் ஒன்று பொலிஸாரிடம் சிக்கியது.

அதில் “நான் ஒரு பேய்… நான்தான் அவர்களை கொலை செய்தேன், நான் வாழத் தகுதி அற்றவள். என்னால் அவர்களை முறையாக பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் நான் அவர்களை கொன்றேன். நான் மிகவும் மோசமான நபர்” என்று அவர் கைப்பட எழுதியிருந்த குறிப்பைபொலிஸார் கைப்பற்றினர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை இவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இவருக்கு எதிராக அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர். லூசி பணியில் இருந்த போது தான் குழந்தை மரணங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததாகவும், அதிலும் குறிப்பாக பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டிலை விட்டு அகன்ற சில நொடிகளில் சில பிறந்த குழந்தைகள் இறந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் இறந்தது எல்லாம் அவர்களின் துர்ரதிர்ஷ்டத்தால் என பெற்றோர்களையும் மற்றவர்களையும் நம்ப வைத்துள்ளார் லூசி என மற்றொரு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

லூசி லெட்பி தரப்பு வழக்கறிஞர், மருத்துவமனையின் பெயரை காப்பாற்றுவதற்காக நான்கு மூத்த மருத்துவர்கள் இந்தப் பழியை லூசி மீது சுமத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இறுதியாக வழக்கை முற்றிலும் விசாரித்த நீதிமன்றம், லூசி லெட்பி கடந்த 2015 முதல் 2016ம் காலக்கட்டத்தில் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு செவிலியராக பணியாற்றிய போது ஒரே குழந்தையை இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்தது உட்பட 7 கொலை முயற்சிகளில் லூசி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது சில இடங்களில் லூசி கண்ணீர் விட்டு அழுதார். தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் இருந்த குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களும் ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு அழுதனர். லூசி லெட்பி மீது சுமத்தப்பட்ட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்