பசும் பால் அருந்துவதன் நன்மைகள்

பசும் பால் அருந்துவதன் நன்மைகள்

 

பசுவின் பால் குழந்தைகளுக்கும், வயதானோர்களுக்கும், நாட்பட்ட சுரம், காயங்கள், வயிற்று புண்,வாதம், வயிற்று வலி, பால்வினை நோய்(மேக நோய்), வலுவின்மை, உடல் இளைத்தவர்கள், மிதமிஞ்சிய போகத்தால் நரம்பு தளர்ந்தவர்கள், மூளை சம்பந்தமான வியாதிஸ்தர்களுக்கு பசுவின் பால் நன்மை தரும்.

ஒவ்வொரு நபருக்கும் தண்ணீர் அவசியம். எனவே நீங்கள் உட்கொள்ளும் தண்ணீரை அதிகரிக்க விரும்பினால் பசும்பாலைத் தேர்ந்தெடுக்கலாம். தோராயமாக 90 சதவிகிதம் பசும்பாலில் தண்ணீர் உள்ளது மற்றும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்தது.

தேகமிளைத்தவர்களுக்கும், நரம்பு தளர்ந்தவர்களுக்கும் காய்ச்சிய பாலுடன் பார்லி அரிசியை மலர வேகவைத்து வடித்தெடுத்த கஞ்சியை 2 பங்கு கூட்டிக் கலக்கி கொடுப்பது சிறந்த பத்திய உணவாகும். சில சந்தர்ப்பங்களில் பசுவின் பாலைக் காய்ச்சி எலுமிச்சம்பழச் சாறுவிட்டு முறித்து வடிகட்டித் தெளிவு நீரையும் கொடுப்பதுண்டு.

பாலின் மருத்துவ குறிப்புகள்

🍺தாய்ப்பால் இல்லாத மற்றும் எலும்பும், தோலுமாக இருக்கும் நோஞ்சான் குழந்தைகளுக்கு பசும் பால் ஒரு அற்புதமான உணவாகும்.

🍺பசும் பாலில் சிறிது மஞ்சள் தூளிட்டுத் தினந்தோறும் காலையில் அருந்தி வந்தால் “வறட்டு இருமல்” குணமாகும்.

🍺விட்டமின் டி, விட்டமின் கே, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம், கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக பால் உள்ளது.

🍺பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

🍺பாலில் உள்ள புரதம் உடலுக்கு தேவையானளவு முழுமையான தரத்திலான புரதமாக சொல்லப்படுகிறது.

🍺இதனால் உடலுக்கு அமினோ அமிலம் கிடைக்கப்பெறுவதால் தசை வளர்ச்சி, தசை பிரச்சினைகள் விரைந்து சரியாகுதல் போன்றவை நடக்கும்.

🍺தூக்கத்தில் பிரச்னை ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம். பாலில் உள்ள அமினோ அமிலத்தில் இருக்கும் செரடோனின் என்ற நரம்பு மண்டலத்தை தூண்டும் சுரப்பி சற்று மயக்க உணர்வை கொடுப்பதால் படுக்கைக்கு செல்லும் முன் பால் குடிப்பதால் நல்ல தூக்கத்தை பெறலாம்!

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்