
பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம்
-பதுளை நிருபர்-
இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு, வர்த்தக நகரத்திற்கு முன்பாக Go Home Gota என கறுப்பு கொடிகளும் தொங்கவிடபட்டுள்ளதை காணக்கூடியாத இருப்பதோடு, பசறை பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வாகன சாரதிகள் இணைந்து பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


