பசறையில் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி
-பதுளை நிருபர்-
பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 11 பெண் தொழிலாளர்களும் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுள் 07 பெண் தொழிலாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
04 பெண் தொழிலாளர்களும் முச்சக்கர வண்டி சாரதியுமாக ஐவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.