பசறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது
-பதுளை நிருபர்-
பசறை பகுதியில் இருவேறு இடங்களில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாதோவ புதிய பிரிவைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மஹதோவ புதிய பிரிவில் பெருந்தோட்ட பகுதியில் வீட்டின் கூரைப்பகுதியில் (சிவிலின்கூரை) மறைத்து வைக்கப்பட்டிருந்த 48,750 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 6 ஆம் கட்டைப் பகுதியில் வீட்டுக்கு பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14,750 மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
