பங்களாதேஷ் பாதுகாப்பு கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!
பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டை, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிச்சில் சந்தித்தார்.
ஜெனரல் குணரத்ன மற்றும் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் ஆகியோரிக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி படைப்பகுதித் தலைவர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
குறித்த கலந்துரையாடலை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்