பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்கு 383 ஓட்டங்கள்

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்களை குவித்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 140 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 174 ரன்கள் குவித்தார்.

ஹென்ரிச் கிளாசென் 49 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்தார்.

தென்னாபிரிக்க அணி 383 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.