பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி பொதுத்தேர்தல்!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நசிருதீன் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி மொத்தமாக 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.