பகிடி வதை தொடர்பிலான உத்தரவு
கடந்த 3 ஆண்டுகளில் அரசப் பல்கலைக்கழகங்களில் நடந்த பகிடிவதைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான புவனேக அலுவிஹார, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில், சிரேஷ்ட மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட வேளையில் தனது தலையில் டயர் தாக்கியதில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பசிந்து ஹர்ஷன சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் அது தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் கோரினர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
nbsp;