நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் பரிசளிப்பு விழா
-மஸ்கெலியா நிருபர்-
35 வது இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவின் இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா கடந்த செப்டம்பர் 28 பொகவந்தலாவ சென் மேரீஸ் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியில் பல பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட இளைஞர்கள் தங்கள் திறமைகளையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்திய நிலையில், இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அவர்களின் சிறந்த சாதனைகள் படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமை விருந்தினராக பங்கேற்று, விளையாட்டிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்தார்.
இவ்விழா சிறப்பாக கலாச்சார நிகழ்ச்சிகளுடனும் நிறைவடைந்தது.


