ஐபிஎல் நேற்றைய அதிரடி துடுப்பாட்ட வெற்றிகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில்இ நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்இ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோனி தலைமையிலான சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் தடம் பதித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில்இ புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் – சென்னை அணிகள்இ முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதின. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட சென்னை அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 குவித்தது. இதையடுத்துஇ 173 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணி துரத்தியது. சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சிஎஸ்கே வெல்வது இதுவே முதல் முறையாகும்.
நேற்றைய 15 ரன்கள் வெற்றியின் மூலம் சென்னை அணிஇ நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும்இ ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் 14-வது தொடரில் களம் கண்டுள்ள சிஎஸ்கேஇ பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிஇ 5-வது முறையாக மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பு சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்