நேர்காணலில் முகத்தில் பருக்கள் உள்ள பெண்கள் நிராகரிக்கப்பட்டனர் – விமான போக்குவரத்து அமைச்சர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் புதிதாக 106 விமானப் பணிப்பெண்களை பணிக்கு நியமித்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

‘நேர்காணலில் சுமார் 6000 பெண்கள் கலந்து கொண்டனர், ஆனால் நாங்கள் 106 பேரை மட்டுமே பணியமர்த்தினோம்,’, என அவர் தெரிவித்தார்.

கல்வித் தகைமைக்கு மேல் தெரிவுசெய்யப்படும் போது, முகத்தில் பருக்கள் உள்ள பெண்கள், சேலை அணியும் போது தழும்பு இருந்தவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக இணைந்து கொள்ளுமாறு ஊடகங்களில் வெளியான விளம்பரங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல இளம் பெண்கள் விண்ணப்பித்திருந்ததாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார.

அத்துடன், இளம் பெண்கள், வளர்ந்து விமானப் பணிப்பெண்ணாக மாறியதும் அழகாக இருக்க வேண்டுமானால், தோலைப் பார்த்துக் கொள்ளவும், க்ரீம் பூசுவது தனது ஆலோசனையாக இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நேர்காணலுக்கு முந்தைய நாள் பெரும்பாலான பெண்கள் அழகாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ,  ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.