நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது போட்டி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரை சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

இலங்கை கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

“தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதாக கூறியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி விவாதம் செய்து, திருத்தங்களுக்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம் ” என ஜனாதிபதி விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்