நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை

சுமார் 26 சமூக ஊடகங்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளங்கள் உள்ளிட்டவைக்கு நேபாள அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த தடை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத சமூக ஊடகங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.