நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 53 பேர் பலி!

நேபாளம் – திபெத் எல்லையில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணியளவில் 7.1 ரிச்டர் அளவுக் கோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் காரணமாக திபெத், நேபாளத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பலர் காயமடைந்துள்ளதுடன் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலநடுக்கமானது சீனாவில் திபெத் பகுதிகள், இந்தியாவில் பிகார், தில்லி மற்றும் வட மாநிலங்களில் உணரப்பட்டது.