நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -வெளிவிவகார அமைச்சு

நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 102 இலங்கையர்கள் வசித்து வருவதாக காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தெரிந்த நபர்களின் வலைப்பின்னல் மூலம் தூதரகம் சமூகத்துடன் நெருக்கமாக தொடர்புகளை பேணிவருகிறது.

எந்தவொரு உதவிக்கும் தூதரகத்தை தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சு தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.