நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய விலைகள்

நாளை புதன்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படவுள்ள புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல்லை 130 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவிற்கும், கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.