
நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்த போக்கே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம்!
நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்த போக்கு காரணமாகவே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாக, சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுபோகத்தின் போது நெல் சந்தைப்படுத்தல் சபையோ அல்லது வேறு எந்த அரச நிறுவனமோ விவசாயிகளிடம் இருந்து நெல்லை உரிய வகையில் கொள்வனவு செய்யவில்லை.
இதன்காரணமாகவே, சந்தையில் அரசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.
நெல் கையிருப்பு இருந்திருக்குமாயின் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க தெரிவித்துள்ளார்.
