
நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லின் விலை 140 ரூபாவாகவும், சம்பா நெல்லின் விலை 130 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
