
நெல் கொள்வனவிற்காக 250 மில்லியன் ரூபா விடுவிப்பு
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புகளுக்காக விவசாயிகளுக்கு செலுத்துவதற்காக 250 மில்லியன் ரூபா இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
15 நாட்களில் 7,035 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாதம் 18ஆம் திகதி முதல், நாடு 120 ரூபாவிற்கும், சம்பா 125 ரூபாவிற்கும், கீரி சம்பா 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
