நெல் உலர விட்டு கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

கிளிநொச்சியில் நேற்று புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் நெல் உலர விட்டு கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் உதயகுமார் குயிலன்(வயது – 23), சபாரத்தினம் தூயவன் (வயது – 25),
கணேஸ் (வயது – 40), வயதுடைய கபிசன் (வயது – 8)ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

பரந்தன் பூநகரி வீதியில் சாமிப்புலம் பாடசாலைக்கு முன்பாக இரவு வீதியில் நெல்லை உலர விட்டு கொண்டிருந்தவர்களை பூநகரி பக்கமாக இருந்து வேகமாக வந்த டிப்பர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை மோதிய டிப்பர் நிறுத்தாமலே தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.