நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க அனுமதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 6,000 மில்லியன் ரூபாய்களுக்கு நிதியைப் பயன்படுத்தி நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறுபோகத்தில் கொள்வனவு செய்த நெல் இருப்பு நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியங்களில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறித்த நெல் இருப்பை 2025 ஆம் ஆண்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் அரிசியாக்கி விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டள்ளது.

இதன்படி லக் சதொச மற்றும் கூட்டுறவு வலையமைப்பின் மூலம் சந்தைக்கு விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.