நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவிற்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள நெடுந்தாரகையினை திருத்தி சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில், நெடுந்தாரகையினை நேரடியாக பார்வையிட்டு, அதனை தற்காலிகமாக திருத்துவதற்கான நடவடிக்கையினை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, நடவடிக்கை எடுத்ததற்கு அமைவாக நெடுந்தாரகை இன்று திங்கட்கிழமையிலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளது.

மேலும் நெடுந்தாரகையினை நிரந்தரமாக திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.