
நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொருங்கிய விமானம்
அமெரிக்காவில் 5 பேர் பயணித்த சிறிய விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் விமானத்தில் பயணித்த ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஓகையோ மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு எஞ்சின்களும் செயலிழந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய வான்வழி போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.

