நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்
நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சீட் பெல்ட் இல்லாத வாகனங்களுக்கு அதனை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
