
நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சங், சுமார் நான்கு வருட காலப் பணியை நிறைவு செய்து இன்று வெள்ளிக்கிலமை கொழும்பிலிருந்து விடைபெறுகிறார்.
தனது பிரியாவிடைச் செய்தியில், இலங்கை மக்களின் உறுதி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வளர்ச்சி குறித்து அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு இலங்கை சந்தித்த மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது ஜூலி சங் தனது பணியை ஆரம்பித்தார்.
அந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை மக்கள் காட்டிய நெகிழ்ச்சித் தன்மை மற்றும் உறுதிப்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா – இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா – இலங்கை இடையிலான தூதரக உறவின் 75 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இவரது பதவிக்காலத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது என்றும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இந்த நட்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
“இலங்கையின் கலை, கதைகள் மற்றும் மக்களின் உணர்வுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். இலங்கையில் ஏதோ ஒரு மாயாஜாலமான விஷயம் இருக்கிறது” என்று அவர் தனது பிரியாவிடை செய்தியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
