நுவரெலியா வை.எம்.எம்.ஏ அமைப்பின் 12ஆவது வருடாந்த இரத்ததான நிகழ்வு

-நுவரெலியா நிருபர்-

அகில இலங்கை நுவரெலியா வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

“இரத்த தானம் செய்வோம் உயிரைக் காற்பாற்றுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் 12ஆவது வருடாந்த இரத்ததான நிகழ்வாக நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன் , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நீயால் வீரசூரிய மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் நுவரெலியா மாவட்ட பணிப்பாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர், வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் இரத்தங்களை சேகரித்தனர்.

இவ் இரத்ததான நிகழ்வில் நுவரெலியா வை.எம்.எம்.ஏ. கிளை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளானவர்கள் இன, மத, மொழி பேதமின்றி கலந்துகொண்டு, இரத்த தானங்களை வழங்கி பிறருயிர் காக்கும் இம்மகத்தான பணியில் இணைந்து குருதிக்கொடை செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இரத்த கொடையாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர்.