
நுவரெலியா வர்த்தகர்கள் சங்க தலைவர் வர்த்தகர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
-நுவரெலியா நிருபர்-
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியா நகரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக, அன்றைய தினம் வியாபார ஸ்தலங்களை மூடி, 2க்கு 1 1/2 அளவுடைய கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்.
அத்தோடு, இன்று வியாழக்கிழமை வாடிக்கையாளர் நலன் கருதி, 6 ஆம் திகதி தமது வியாபார நிலையம் மூடப்படும் என அறிவித்தல் காட்சிப்படுத்த வேண்டும், எனவும் நுவரெலியா வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார, பொருளாளர் வசீகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
