நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இன்று சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பொலிஸாருடன் வாக்குவாதத்தின் ஈடுபட்டனர் .
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குள் உள் நுழையும் பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் தரிப்பிடத்திற்குள் உள் உள்நுழையாமல் குயீன்ஸ் எலிசபெத் வீதி ,லோஷன் வீதி மற்றும் பிரதான வீதியூடாக சுற்றி வந்து முன்னதாக பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியேறும் பேருந்து நிலைய நுழைவாயிலில் ஊடாக உள்ளே செல்ல வேண்டும் எனவும் அதேபோல் முன்னதாக உள் நுழையும் பேருந்து நிலைய நுழைவாயிலில் மூலம் வெளியே செல்ல வேண்டும் எனவும் புதிய சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தினர்.
அதேபோல் பேருந்து தரிப்பிடத்தினுள் பேருந்துக்களை நிறுத்துவது குறித்தும் புதிய சட்டங்களை பேருந்து சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் கூறியதால் இன்று பொலிஸாருடன் வாக்குவாதத்தின் ஈடுபட்டு இதற்கு மறுப்பு தெரிவித்தனர் .
இதனைத் தொடர்ந்து பொலிஸார் நுவரெலியா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர் வரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் விசேடமாக கலந்துரையாடி இதற்கு உரிய தீர்வு பெற்று தருவதாக பொலிஸார் கூறியதை அடுத்து பேருந்துக்கள் முன்னதாக பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களை பயன்படுத்தியது போல் பயன்படுத்தி வருகின்றனர் .
இது குறித்து பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் கூறுகையில்,
தற்போது அமல்படுத்தப்படுகின்ற சட்டமானது பாரிய சுற்று வீதி ஒன்று, அத்துடன் நுவரெலியா – கண்டி வீதியானது எந்நேரமும் போக்குவரத்து நெரிசலான விதியாகும், இதில் இதன் ஊடாக சென்று நுவரெலிய பேருந்து தறுப்பிடத்துக்கு வருவது சாத்தியமற்றதாகும் என தெரிவித்தனர்.






