நுவரெலியா பூண்டுலோயாவில் தீ விபத்து – 06 வீடுகள் சேதம்
பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லைன் குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலில் 20 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு தொகுதியில் 06 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், சொத்துகளும் சேதமடைந்துள்ளதுடன், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தோட்ட இளைஞர்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.