
நுவரெலியா பீட்ரூ தோட்ட இளைஞனை காணவில்லை!
நுவரெலியா, பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த லீலாரத்ன கயான் Gayan (வயது 30) என்பவர் கடந்த 09.12.2025 அன்று நுவரெலியாவிலிருந்து வெளிமடை பகுதிக்கு தொழில் நிமித்தமாக சென்ற நிலையில், அன்றிலிருந்து இன்று வரை அவர் தொடர்பான எந்தவிதமான தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இளைஞன் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது மகனை கண்டுபிடிக்க ஊடகங்களை நாடுவதாக அவரது தந்தை மற்றும் தாய் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல் தொழிலுக்கு சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், அவரது கைபேசியும் செயலிழந்த நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்ட போதும் எந்தவிதமான தகவலும் கிடைக்காத காரணத்தால், சம்பந்தப்பட்ட விடயம் குறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர் .
லீலாரத்ன கயான் தொடர்பாக இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், அவரது பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
எனவே குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 075 376 2151 , 077 342 1466 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
