நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்: 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் அங்குள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை பகுதிகளில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்