நுவரெலியாவில் நெடுஞ்சாலை தாழ் இறக்கம்
-மஸ்கெலியா நிருபர்-
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பூண்டு லோயா தலவாக்கலை பிரதான வீதியில் கும்புலு ஓயா பகுதியில் பிரதான நெடுஞ்சாலை தாழ் இறங்கியுள்ளது.
இந்த நெடுஞ்சாலை குறுகியதானது.கும்புலு ஓயா பகுதியில் வீதியின் மேல் பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளது.
தொடர் மழை பெய்யும் பட்சத்தில் அந்த பிரதான வீதி தாழ் இரங்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தாழ் இரக்கம் ஏற்படும் பட்சத்தில் சாலையின் மேற் பகுதியில் உள்ள பாரிய கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
அவ்வாறு கற்பாறைகள் சரிந்து விழும் பட்சத்தில் பூண்டு லோயா தலவாக்கலை பிரதான வீதி கும்புலு ஓயா பகுதியில் பிரதான வீதி இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.
தற்போது இவ் வீதி ஊடாக செல்லும் வாகனங்கள் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ள படுகின்றனர்.