நுவரெலியாவில் கடும் வெள்ளம் – பொதுமக்கள் அச்சம்

நுவரெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் பல்வேறு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை சில பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் 16 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக நுவரெலியாவில் அடிக்கடி பெய்யும் மழையால் இவ்வாறான வெள்ள நிலைமை ஏற்படுவது வழமையாக காணப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.