
நுவரெலியாவில் கடும் வெப்பமான வானிலை
-மஸ்கெலியா நிருபர்-
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை அதிக குளிரான காலநிலை நிலவுகிறது.
மேலும் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து உள்ளது.அதே போல காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து உள்ளது.மற்றும் லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
குறிப்பாக நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கங்கள் அமைந்துள்ளது நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது தொடர்ந்து இவ்வாறு காலநிலை நிலவும் பட்சத்தில் இன்னும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
