
நுகர்வோர் ஆலோசனைக்குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்
-கிண்ணியா நிருபர்-
இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக்குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிராந்திய நுகர்வோர் வலையமைப்பானது (RCN) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் (CCC) வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒழுங்குமுறை துறைகளில் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல், ஒழுங்குமுறை முடிவெடுப்பதில் நுகர்வோர் பங்கேற்புக்கான கட்டமைக்கப்பட்ட நுகர்வோர் தளத்தை வழங்குதல், சேவை தரநிலைகள், கட்டண கட்டமைப்புகள் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகள் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் கல்வியை எளிதாக்குதல், பிராந்திய மட்டத்தில் நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதில் உதவுதல், ஒழுங்குமுறை மற்றும் கொள்கை மேம்பாடுகள் குறித்து நுகர்வோர் ஆலோசனை குழுவுக்கு (CCC) பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை பிராந்திய நுகர்வோர் வலையமைப்பின் முதன்மையான நோக்கங்களாகும்.
பிராந்திய நுகர்வோர் வலையமைப்பானது பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டம் போன்ற மூன்று முக்கிய நிலைகளில் நுகர்வோர் கவலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பாக அமைந்துள்ளது.
இதன்போது நுகர்வோர் விவகார பிரிவு மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர்களான ரொஷான் வீரசூரிய, தனுஜ் தனுஷ்க விஜேசூரியா, நுகர்வோர் விவகார பிரிவு உத்தியோகத்தர் எம்.இசட்.எம். ரஹான் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


