நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு கருத்தரங்கு
ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலயம் உயர்தர மாணவர்களுக்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடசாலை வர்த்த கலை மற்றும் உயர்தர வர்த்தக பிரிவு பொறுப்பான ஆசிரியர் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வர்த்தக மற்றும் கலை பிரிவு மாணவர்களுக்கான நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் திரு. முஹம்மட் ஸாஜித் ஸமான் மற்றும் என்.எம் றிப்கான், எம்.எச்.எம் றிபாஜ் கலந்து கொண்டார்.