நீர் விநியோக தடை; பொது மக்களுக்கு அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரின் அழுத்தம் குறைந்து வருகின்றமையால் மோட்டர் ஊடாக நீர் தாங்கிகளுக்கு நிரப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளதாகவும் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்  (NWSDB)  அதிகாரி தெரிவித்துளார்.

அத்துடன், நிலவும் வறட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.