
நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு
நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு
கொடுப்பனவு வழங்கப்படாமை, வரித்திருத்தம் உள்ளிட்ட சில காரணிகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், நீரேந்து நிலையங்களின் பணிகள் வழமை போல் இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
