நீர் தொட்டியில் விழுந்த குழந்தை
மொனராகலை – குமாரவத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குமாரவத்த பகுதியை சேர்ந்த 1 வயது 11 மாதங்களும் பூர்த்தியான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈட்டுப்பட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் தாயார் தேடிய போதே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடப்பதை கண்டு மீட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மெலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்