நீர் தின விழிப்புணர்வு

-மூதூர் நிருபர்-

திருகோணமலையில் முன்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் முகமாக இன்று புதன் கிழமை காலை திருகோணமலை பிரெய்ஸ் பூல் சர்வதேச முன்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் அருகே கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது நீரின் பயன்பாடு தொடர்பான பதாதைகளை ஏந்தியும், நீரை சேமியுங்கள், நீரை வீணாக்க வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.