நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்! – அவசர எச்சரிக்கை

பண்டிகை காலத்தைக் கொண்டாடும் பொதுமக்கள், அறிமுகமில்லாத நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் இன்று  புதன்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களின் கட்டமைப்பு மற்றும் ஆழம் பாரியளவில் மாறியுள்ளன.

கடந்த காலங்களில் பாதுகாப்பாக இருந்த இடங்கள் கூட தற்போது ஆபத்தான ஆழமான பகுதிகளாக மாறியிருக்கக்கூடும்.

எனவே, உள்ளூர்வாசிகளிடம் ஆலோசனை பெறாமல் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்.

விடுமுறை காலத்தில் வீதி விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வாகனங்களின் தரத்தை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொண்டாட்டங்கள் சோகமாக முடிவதைத் தவிர்க்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சமித்த சிறிதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.