நீர்க் கட்டணம் குறைப்பு

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியானது.

இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7 வீதத்தாலும், அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5 வீதத்தாலும், பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 6.3 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்